நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.10-ஆக நீடிக்கிறது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாததால், இங்கும் விலையில் மாற்றம் செய்யாமல் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதன்கிழமைக்கான முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.10-ஆக நீடிக்கிறது.
இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.84-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.