நாமக்கல் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். ராசிபுரம் நகரச் செயலர் டி.தமிழ்செல்வன் வரவேற்றார். நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் ப.சம்பத்குமார் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் தலைமை நிலையச் செயலரும், மண்டலப் பொறுப்பாளருமான பி.பழனியப்பன் பங்கேற்று வாக்குச் சாவடி முகவர்களுக்கான படிவங்களை வழங்கியதுடன், ஏற்கெனவே வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக்கொண்டார். மேலும், கிளை செயலர்கள் பட்டியல் போன்றவற்றை பெற்றுக்கொண்டு நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலர் ஏ.பி.பழனிவேல், அமைப்புச் செயலர் என்.கே.பி.ரவிக்குமார், வர்த்தக அணி இணைச் செயலர் கே.ஆர்.நல்லியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் வி.திருப்பதி, மாவட்ட மகளிரணி இணைச் செயலர் திலகம் உள்ளிட்ட ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்று வாக்குச் சாவடி முகவர்களுக்கான படிவங்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.