இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி
By DIN | Published On : 12th February 2019 08:55 AM | Last Updated : 12th February 2019 08:55 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், செல்வம் கலை, அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய வேலைவாய்ப்புப் பயிற்சி முகாமில், 450 பேர் பங்கேற்றனர்.
கிராமப்புறத்துக்கான அறிவியல்- தொழில்ட்பத்துக்கான பயன்பாடு எனும் தலைப்பில் 3 நாள்கள் நடைபெற்ற இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தாளாளர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் கவீத்ரா நந்தினி பாபு, துணைத்தாளாளர் செ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ந.ராஜவேல் வரவேற்றார். விழாவை அறக்கட்டளை உறுப்பினர் ஜெயம் செல்வராஜ் குத்துவிளக்கேற்றி, தொடக்கிவைத்தார்.
தேர்வுக் கட்டுபாட்டு அலுவலர் கி.சி.அருள்சாமி, கல்லூரித் துணை முதல்வர்கள் கே.கே. கவிதா, ப.தாமரைச்செல்வன், கி.குணசேகரன், புலமுதன்மையர் செ.பத்மநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அசோலா தீவனப் பயிர் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் ப.சிவசக்திவேலன் , காளான் வளர்ப்பு குறித்து , நாமக்கல் இயற்கை காளான் பண்ணையை சேர்ந்த செ.ரம்யா, சூரிய ஒளியில் இயங்கும் சாதனங்களின் பயன்பாடுகள் குறித்து தேசிய புதுப்பிக்கதக்க ஆற்றல் பயிற்சி நிறுவன பயிற்றுநர் வி.மனோஜ்குமார்,
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு குறித்து , செல்வம் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் மா.முத்துக்குமார், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பெ.முத்துசாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 450 பேர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்றோருக்குச் சன்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிறைவில் பயிலரங்க ஏற்பாட்டாளர் புலமுதன்மையர் அ.எழிலரசு நன்றி கூறினார்.