ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர்: ஆட்சியரிடம் பெண்கள் வலியுறுத்தல்

நாமக்கல் அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளதால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று

நாமக்கல் அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளதால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 இதுதொடர்பாக அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனுவில்
 கூறியிருப்பதாவது:-
 கோனூர் கந்தம்பாளையம் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள். இங்கு போதிய அளவில் குடிநீர் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீரை குடம் ரூ.4-க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், குடிநீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 எனவே தடையில்லாமல் குடிநீர் வழங்க புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும். மேலும் மேல்நிலை தொட்டிக்கு அருகில் குடிநீர் குழாய் அமைப்பதைத் தவிர்த்து, குடியிருப்பு ப்பகுதிகளில் குடிநீர் குழாய்களை அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com