சுடச்சுட

  

  பரமத்தி ஒன்றியத்தில் ரூ. 62 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

  By DIN  |   Published on : 04th January 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 62 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பில்லூர் ஊராட்சி, அர்த்தனாரிபாளையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம், அதே பகுதியில் ரூ. 12 ஆயிரம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிப்பிடங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதே பகுதியில் ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் கற்கள் கொண்டு கரை பலப்படுத்தப்பட்டு வரும் பணியையும், பில்லூர் உத்திகாபாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியையும், மேல்சாத்தம்பூர் ஊராட்சியில் ரூ. 22 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியையும்  ஆய்வு செய்தார்.
  நல்லூர் ஊராட்சியில் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய பணி மற்றும் மணியனூர் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணியையும் ஆய்வு செய்தார்.
  மேலும் வளர்ந்த மரக்கன்றுகளை சரியான நேரத்தில் சாலை ஓரங்களிலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நட்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியாமரியம் அறிவுறுத்தினார்.
  ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  மாலதி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாளன், சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai