வரதராஜபெருமாள் கோயிலில்13-இல் லட்சார்ச்சனை விழா
By DIN | Published On : 09th June 2019 04:38 AM | Last Updated : 09th June 2019 04:38 AM | அ+அ அ- |

நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 13 - ஆம் தேதி லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.
நாமக்கல் மலைக்கோட்டையில் நின்ற கோலத்தில் வரதராஜ பெருமாள் சன்னதி உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் லட்சார்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டிற்கான விழா வரும் 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஐந்து கட்டமாகவும், மாலையில் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஐந்து கட்டமாகவும் லட்சார்ச்சனை விழா நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 14-ஆம் தேதி இரவு லட்சார்ச்சனை விழா நிறைவு பெற்றவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்படுகிறது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.