சுடச்சுட

  

  ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

  By DIN  |   Published on : 14th June 2019 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  நாமக்கல், ஜூன் 13:  பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின்  கீழ், ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தில், 5 ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் பயனடையும் வகையில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு  ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  நாமக்கல் மாவட்டத்தில், முதல் கட்டமாக சுமார் 69,333  சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது  நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இத் திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.  தகுதியுடைய விவசாயிகள்  அனைவரையும் இத் திட்டத்தில் சேர்ப்பது அரசின் முக்கிய நோக்கமாகும்.  தற்போது இத் திட்டத்தில் சேருவதற்கு சிறு விவசாயிகள் மட்டுமின்றி, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.
  இத் திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களான, தங்கள் பெயரிலான பட்டா, சிட்டா, ஆதார் எண், வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பம் வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்வோரும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால்,  அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட  வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து, வரும் 25 - ஆ-ம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து கொண்டு இத் திட்டத்தில் பங்கேற்கலாம். 
  இதற்காக,  வட்ட மற்றும் கிராம அளவில் நடைபெறும் சிறப்பு முகாம்களை  தகுதியுடைய விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai