கொப்பரை தேங்காய் விலை உயர்வு
By DIN | Published On : 14th June 2019 11:02 AM | Last Updated : 14th June 2019 11:02 AM | அ+அ அ- |

பரமத்திவேலூர், ஜூன்13: பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்வடைந்துள்ளது.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதன் பருப்புகளை விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தாற் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 3,805 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.80.39-க்கும், சராசரியாக ரூ.82.69 - க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 812 - க்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,265 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.88.65-க்கும், குறைந்த பட்சமாக ரூ.81.99 -க்கும், சராசரியாக ரூ.86.99 -க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 191 - க்கு வர்த்தகம் நடைபெற்றது. கொப்பரை தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...