அரசுப் பள்ளியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு
By DIN | Published On : 06th March 2019 08:39 AM | Last Updated : 06th March 2019 08:39 AM | அ+அ அ- |

நாமக்கல் மதுவிலக்கு பிரிவு காவல் துறை சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆர்.புதுப்பட்டி அரசு ஒன்றிய துவக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் செட்டியண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டுப் புத்தகம், தேர்வு அட்டை உள்ளிட்ட பொருள்களை காவல் ஆய்வளர் செந்தில்குமார் வழங்கினார்.
இதையடுத்து, மதுவால் ஏற்படும் தீமைகள், கள்ளச் சாராயம் காய்ச்சினால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-10581 போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் மணிகண்டன், ஆசிரியர்கள் வினோத், வெண்ணிலா, செளந்தரம், நீலா ,வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.