தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 7 லட்சம் திருட்டு
By DIN | Published On : 22nd March 2019 09:12 AM | Last Updated : 22nd March 2019 09:12 AM | அ+அ அ- |

திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 7 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் மோர் பாளையம் பிரிவு சாலை பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.
பலர் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். 10 ஆண்டுகளாக இயங்கி வருவதாகக் கூறப்படும் இந்த நிறுவனத்தில் பழனியப்பன் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள சக்திவேல் உணவு இடைவேளைக்குச் சென்றிருந்தபோது மேலாளர் பழனியப்பன் வங்கிக்குச்
சென்றுள்ளார்.
பழனியப்பன் வங்கிக்குச் சென்று விட்டு வந்து பார்த்தபோது மேஜை டிராயர் திறந்து இருப்பது தெரியவந்தது. மேஜை டிராயரில் ரூ. 7 லட்ச பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவம் குறித்து எலச்சிபாளையம் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர். திருட்டு சம்பந்தமாக எலச்சிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...