முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.70-ஆக தொடர்கிறது
By DIN | Published On : 22nd March 2019 09:07 AM | Last Updated : 22nd March 2019 09:07 AM | அ+அ அ- |

நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை அதன் தலைவர் டாக்டர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசனை நடத்தப்பட்டதில், எவ்வித மாற்றமின்றி ரூ. 3.70 விலையைத் தொடரலாம் என முடிவெடுக்கப்பட்டது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): சென்னை-375, ஹைதராபாத்-335, விஜயவாடா-347, மும்பை-385, மைசூரு-365, பெங்களூரு-360, கொல்கத்தா-396, தில்லி-355, ஹோஸ்பெட்-325.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை ரூ. 6 உயர்த்தப்பட்டு ரூ. 59-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி விலை ரூ. 78-இல் இருந்து ரூ. 3 உயர்த்தி ரூ. 81-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...