அடிப்படை வசதி கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு
By DIN | Published On : 28th March 2019 09:12 AM | Last Updated : 28th March 2019 09:12 AM | அ+அ அ- |

ராசிபுரம் அருகே அடிப்படை வசதி செய்து தராததைக் கண்டித்து, தேர்தலை புறக்கணிக்க அக் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ராசிபுரத்தை அடுத்துள்ள கட்டபுளியாமரம் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரக் கோரி, பல முறை மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்தும், நேரில் சந்தித்து புகார் கூறியும் எவ்வித பலனும் இல்லையாம்.
இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆதித்தமிழர் மக்கள் கட்சி உறுப்பினர்கள் தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...