தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இக்கட்சியின் தலைமை உயர்மட்டக்குழுக் கூட்டம் புதன்கிழமை ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் ப.எழில்செல்வன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கி.தமிழ்வாணன் வரவேற்றார். மாநிலச் செயலர் மு.சு.இளையராஜா, மாநில பொருளாளர் அ.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது. நாமக்கல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றிக்கு பிரசாரம் மேற்கொள்ள கட்சி தேர்தல் பணிக்குழு அமைப்பது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெற்றிக்கு பாடுபட பிரசாரக் குழுவை அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் பெ.அருள்மொழித்
தேவன், நாமக்கல் மாவட்டத் தலைவர் மங்கையர்க்கரசி, நகரச் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.