"மணல் குவாரியில் 15 நாளுக்கு ஒருமுறை இணையவழி முன்பதிவு'
By DIN | Published On : 30th March 2019 09:30 AM | Last Updated : 30th March 2019 09:30 AM | அ+அ அ- |

அரசு மணல் குவாரிகளில், இணையவழி முன்பதிவு சேவை, 15 நாள்களுக்கு ஒருமுறை நடைபெறுவதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில், அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: அரசு மணல் குவாரிகளில் லாரிகளுக்கு மணல் வழங்கும் இணையவழி முன்பதிவு, மக்களவைத் தேர்தலையொட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
இணையவழி மூலம் மணல் முன்பதிவு செய்வது 15 நாள்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். மணல் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கூடுதல் மணல் குவாரிகளை திறந்து கட்டுமானப் பணிக்கு தேவையான அளவிற்கு மணலை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு லோடு என்ற அடிப்படையில் மணல் விநியோகம் இருக்க வேண்டும் என்பதே அனைத்து மணல் லாரி உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...