பொறியியல் சேர்க்கை: நாமக்கல் மையத்தில் 29 பேர் விண்ணப்பிப்பு
By DIN | Published On : 05th May 2019 03:30 AM | Last Updated : 05th May 2019 03:30 AM | அ+அ அ- |

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க, நாமக்கல் மையத்தில் சனிக்கிழமை வரை 29 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இக்கலந்தாய்வில் பங்கேற்க ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறை வியாழக்கிழமை (மே 2) தொடங்கியது. தமிழகம் முழுவதும் 43 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மையங்கள் மட்டுமின்றி, தனியார் இணையதள மையங்களிலும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கின்றனர்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் கட்டுப்பாட்டின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 3 நாள்களில் 29 பேர் விண்ணப்பித்துள்ளனர். பேராசிரியர் வி.மகாதேவன் தலைமையில் மூன்று பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க உதவுகின்றனர். ஆன்-லைனில் விண்ணப்பிக்க மே 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.