உழவர் சந்தையில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
By DIN | Published On : 15th May 2019 08:30 AM | Last Updated : 15th May 2019 08:30 AM | அ+அ அ- |

நாமக்கல் உழவர் சந்தையில் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் செலம்ப கவுண்டர் பூங்கா எதிரில் உள்ள உழவர் சந்தையில், காய்கறிகளுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோடை காலத்தில் தண்ணீர் இன்றி காய்கறிகளையும், பழங்களையும் உற்பத்தி செய்துகொண்டு வரும்போது, கட்டுப்படியாகாத விலையை நிர்ணயிப்பது ஏன் என்று கூறி, வேளாண்மை அலுவலர் சிவராஜிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
இதுகுறித்து உழவர் சந்தை விவசாயிகள் கூறியபோது, "சரியான விலை கிடைக்க வேண்டும். இல்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.