ஜேசிஐ சார்பில் பட்டிமன்றம்
By DIN | Published On : 19th May 2019 07:37 AM | Last Updated : 19th May 2019 07:37 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவையொட்டி, ஜேசிஐ டெம்பிள் சங்கம் சார்பில், செங்குந்தர் திருமண மண்டபத்தில் அண்மையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சியாம் தலைமை வகித்தார். பட்டிமன்றத்தை முன்னாள் தேசிய சட்ட ஆலோசகர் உலகநாதன் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மண்டல உதவித் தலைவர் மதிவாணன், மண்டல இயக்குநர் கவிக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இன்றைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவை சொத்து சுகமா, சொந்த பந்தமா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கோவை விஜய்குமார், திருப்பூர் ரதிசுதா, சேலம் மதுமிதா, ஈரோடு தீபிகா, லீலாவதி, தலைவாசல் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாதங்களை முன்வைத்துப் பேசினர். இரு அணிகளின் வாதங்களையும் கேட்டு நடுவர் ஹரி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவை சொந்த பந்தமே என தீர்ப்பு வழஙகினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.