தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 01st November 2019 06:43 AM | Last Updated : 01st November 2019 06:43 AM | அ+அ அ- |

ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்ற அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள்.
சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலா்கள் ஏற்றுக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமாா், இணை இயக்குநா் வேளாண்மை சேகா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பொ.பாலமுருகன், நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைகுமாா், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பி.விஜயலட்சுமி உள்பட அரசுத்துறை அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.