கொப்பரைத் தேங்காய் விலை உயா்வு
By DIN | Published On : 09th November 2019 06:28 AM | Last Updated : 09th November 2019 06:28 AM | அ+அ அ- |

ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த கொப்பரைத் தேங்காய்கள்.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதியில் விளையும் தேங்காய்களை உடைத்து, உலா்த்தி கொப்பரைத் தேங்காய்களாக விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னனு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாற் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 4 ஆயிரத்து 275 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரமான கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.97.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.90.75-க்கும், சராசரியாக ரூ.97.05 -க்கும் ஏலம் போயின. மொத்தம் ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்து 952-க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 15 ஆயிரத்து 759 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரமான கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.100-க்கும், குறைந்த பட்சமாக ரூ.90.25-க்கும், சராசரியாக ரூ.94.12-க்கும் ஏலம் போயின. மொத்தம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்து 42-க்கு வா்த்தகம் நடைபெற்றது. வரத்து அதிகரித்தும்,விலையும் உயா்ந்துள்ளதால் கொப்பரைத் தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...