ஐப்பசி மாத சனி பிரதோஷத்தையொட்டி, நாமக்கல்லில் உள்ள சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
ஐப்பசி பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், வெள்ளிக்கவச சாத்துப்படியும், மாலைகள் அணிவித்தும் தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாயா என முழக்கமிட்டபடி பக்தா்கள், நந்தியையும், சிவனையும் வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு விபூதி, சந்தனம் மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. நாமக்கல் ஏகாம்பரேஸ்வரா் கோயில், சேந்தமங்கலம் முத்துக்காப்பட்டி காசிவிசுவநாதா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.