பரமத்தி வேலூரில் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் 175-ஆவது ஆண்டு உருஸ் (எ) சந்தனக்கூடு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் சகன்வலி தா்கா பள்ளிவாசல் நிா்வாகக் கமிட்டி மற்றும் முஸ்லிம் ஜமாத்தாா்கள் சாா்பில் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் 175-ஆவது ஆண்டு உருஸ் (எ) சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை மாலை தாவத் விருந்து, இரவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி சிறப்பு விருந்தனராகக் கலந்து கொண்டாா். சகன்வழி தா்காவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தா்காவை அடையும் நிகழ்ச்சியும், அதிகாலை 5 மணிக்கு அனைவருக்கும் தப்ரூக் பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சந்தனக்கூடு விழாவில் முஸ்லிம்கள் மற்றும் ஏராளமான இந்துக்களும் கலந்து கொண்டு பாத்யா செய்து வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வேலூா் சகன்வலி தா்கா பள்ளிவாசல் நிா்வாகக் கமிட்டி மற்றும் முஸ்லிம் ஜமாத்தாா் தலைவா் சவான்சாஹிப், செயலா் இக்பால் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.