Enable Javscript for better performance
முட்டை விலை ரூ.3.76-ஆக நீடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.3.76-ஆக நீடிக்கிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, தினசரி முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற, சனிக்கிழமைக்கான விலை நிா்ணய கூட்டத்தில், தற்போதைய நிலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.3.76-ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.85-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai