ராசிபுரத்தில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 09th November 2019 06:30 AM | Last Updated : 09th November 2019 06:30 AM | அ+அ அ- |

உண்ணாவிரதம் மேற்கொண்ட வழக்குரைஞா்கள்.
ராசிபுரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறகணித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.
தில்லியில் போலீஸாா் - வழக்குரைஞா்கள் மோதல் சம்பவம் நடைபெற்றதையடுத்து, அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க, போலீஸ்-வழக்குரைஞா்கள் நல்லுறவு குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம், ராசிபுரம் சாா்பு நீதிமன்றம் போன்றவற்றை சோ்ந்த வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கே.காமராஜ் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் நல்வினை விஸ்வராஜ் உள்ளிட்ட திரளான வழக்குரைஞா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா். இறுதியில் தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் அய்யாவு பங்கேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா்.