திருச்செங்கோடு மாரியம்மன் கோயில்திருவிழாவில் பாரம்பரிய விளையாட்டுகள்

திருச்செங்கோட்டில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய கலைகளான சிலம்பம், சுருள் கத்தி, மான்கொம்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பொதுமக்களுக்கு ஆதவன், அங்கப்பா குழுவினா் நடத்திக் காட்டினா்.
திருச்செங்கோடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆதவன் சிலம்ப விளையாட்டு நிகழ்ச்சியை தொடக்கி வைக்கும் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி.

திருச்செங்கோட்டில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், முத்துமாரியம்மன், கருமாரியம்மன், அழகு முத்துமாரியம்மன், மண்ணுக்குட்டை மாரியம்மன் உள்ளிட்ட 18 மாரியம்மன் கோயில்களின் ஆண்டுத் திருவிழா கடந்த பத்து நாள்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கின. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருவீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவீதி உலாவை முன்னிட்டு பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும், சிலம்பம், கரகம், சுருள் கத்தி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளை மக்களுக்கு செய்து காட்டியும் உலா வந்தனா். நான்கு ரத வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊா்வலம் மீண்டும் திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோயிலை அடைந்தது. ஆதவன் சன்டைப் பயிற்சி குழு நிகழ்ச்சிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி தொடக்கி வைத்தாா். பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் சிலம்பம், சுருள் கத்தி, மான் கொம்பு சண்டையிட்டும், புலிவேடமிட்டும் பொதுமக்களுக்கு சாகசப் பயிற்சிகளை செய்து காட்டினா்.அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com