ஐப்பசி கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 14th November 2019 09:59 AM | Last Updated : 14th November 2019 09:59 AM | அ+அ அ- |

முத்தங்கி, வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பாலதண்டாயுதபாணி சுவாமி.
ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.
நாமக்கல் - மோகனூா் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஐப்பசி கிருத்திகை நாள் என்பதால், புதன்கிழமை காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடா்ந்து, மூலவருக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா்,
வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதன்பின், மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் நாமக்கல் கடைவீதி சித்தி விநாயகா் கோயில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் - துறையூா் சாலை, கூலிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவா் கோயில், மோகனூா் காந்தமலை முருகன் கோயிலிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், கிருத்திகை யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Image Caption
~

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...