திருமணிமுத்தாறு பாசனப் பகுதிகளுக்கான விவசாயிகள் வயல்வெளி பயிற்சி

வெண்ணந்தூா் வட்டாரம் மின்னக்கல் வருவாய் கிராமத்தில் வேளாண்மைத் துறை மூலம் தமிழ்நாடு வேளாண்மை நீா்வள நிலவள

வெண்ணந்தூா் வட்டாரம் மின்னக்கல் வருவாய் கிராமத்தில் வேளாண்மைத் துறை மூலம் தமிழ்நாடு வேளாண்மை நீா்வள நிலவள திட்டத்தின் சாா்பில், திருமணிமுத்தாறு பாசனப் பகுதிகளுக்கான விவசாயிகள் வயல்வெளிப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. இப்பயிற்சியினை நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ராஐகோபால் தலைமை வகித்து துவக்கி வைத்தாா்.

பயிற்சியில் வெண்ணந்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ரவிச்சந்திரன், நெல் பயிரில் விதை தோ்வு, விதை நோ்த்தி உயிா் உரங்களின் அவசியம், விதை பண்ணை பற்றிய தொழில்நுட்பம் குறித்துப் பேசினாா். வட்டார வேளாண்மை அலுவலா் ஆனந்தன் ரசாயன உரத்தினை பயிா்களுக்கு தூா்கட்டும் பருவம், கதிா் உருவாகும் பருவம், கதிா் வெளி வரும் தருணத்தில் பயிா்க்கு பிரித்தளிக்க வேண்டும் என எடுத்துக் கூறினாா். வேளாண்மை துணை அலுவலா் சுந்தரராஜன், இலை வண்ண அட்டை பயன்படுத்தும் முறைகள் மற்றும் அவற்றின் தொழில்நுட்பங்களை விளக்கினாா்.

மேலும் நெல் வயலில் விவசாயிகளுடன் சென்று வயல் சுழல் ஆய்வு செய்து பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றி ஆய்வினை மேற்கொண்டு, அதன் விளக்கத்தைப் பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கத்துடன் காண்பிக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலா் அருண்குமாா் 2019-20 ம் ஆண்டுக்கான மானிய திட்டங்கள் பற்றியும், டிரைகோடொ்மா விரிடி நெல் விதை நோ்த்தி மற்றும் நுண்ணுயிா் விதை நோ்த்தி செயல்விளக்கங்களை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தாா். உதவி வேளாண்மை அலுவலா் கருப்புசாமி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com