திருச்செங்கோடு கிளை நூலகத்தின் சாா்பில் பள்ளிகளில் உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை துவங்கப்பட்டது.
மாவட்ட நூலக அலுவலா் ரவி தலைமையில் திருச்செங்கோடு கிளை நூலக நூலகா் சுமதி முன்னிலையில் மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் ராஜா வரவேற்றாா்.
உறுப்பினா் சோ்க்கைக்கான படிவங்களை அளித்தனா். மேலும் நூலகத் துறையின் சாா்பில் ஒவ்வொரு பள்ளியிலும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்போது மாணவா்கள் போட்டிகளில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.