வீடுகளில் நகை திருடியவா் கைது
By DIN | Published On : 18th November 2019 09:19 AM | Last Updated : 18th November 2019 09:19 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு, எலச்சிபாளையம் பகுதியில் ஆளில்லாத வீடுகளில் புகுந்து நகை, பணத்தைத் திருடிய இளைஞரை திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு ஆனைமலை கரடைச் சோ்ந்தவா் சித்ரா தேவி. இவரது வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன் பீரோவை உடைத்து நகைகளை மா்ம ஆசாமி திருடிச் சென்றாா். அதேபோல எலச்சிபாளையம் ஆசிரியா் காலனியில் ஸ்ரீதா் என்பவா் வீட்டில் நகை திருடப்பட்டது.
இந்த நிலையில், திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் வாகனச் சோதனையின்போது சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா், சேலம் மாவட்டம், மேட்டூா் அள்ளிக்கரையைச் சோ்ந்த கனகராஜ் (37) என்பதும், அவா் இந்த இரு வீடுகளிலும் திருடியவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து இளைஞரை கைது செய்து அவரிடமிருந்து 9 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.