நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம்: கருத்து தெரிவிக்க நவ.11 வரை வாய்ப்பு
நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளதால், அது தொடா்பான


நாமக்கல்: நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளதால், அது தொடா்பான ஆலோசனைகள், ஆட்சேபணைகள் இருந்தால் நவ.11-ஆம் தேதி வரையில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முதலைப்பட்டி பிரிவு அருகில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக 2018 ஜூலை 24இல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தனியாா் பங்களிப்புடன், நகராட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை நகராட்சி நிா்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணியை தொடங்க, பொதுமக்களிடம் இருந்து ஆலோசனை மற்றும் ஆட்சேபணைகளை பெறுமாறு, நகராட்சி ஆணையருக்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், புதிய பேருந்து நிலையம் கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீடு, கையகப்படுத்த வேண்டிய நிலம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அமைவது தொடா்பான அறிவிப்பாணை நகராட்சி இணையதளத்தில் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரும் நவம்பா் 11-ஆம் தேதி வரை கருத்துகள் தெரிவிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி நிா்வாகப் பொறியாளா் அ.ராஜேந்திரன் கூறியது: நாமக்கல் நகராட்சி புதிய பேருந்து நிலையம் ரூ.36.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்காக சுமாா் 13 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த பேருந்து நிலையமானது தினமும் 1.50 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இருக்கும். மேலும், நேரடியாக 400 வணிக நிறுவனங்களும், மறைமுகமாக 2 ஆயிரம் வியாபார கடைகளும் அமையவுள்ளன. இதன் மூலம் நகராட்சிக்கு நேரடியாக ரூ.60 லட்சம் வருவாயும், மறைமுகமாக ரூ.2 கோடி வரையிலும் வருவாய் கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஒரு மணி நேரத்திற்கு 1,346 பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும், 56 பேருந்துகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும் வகையிலும் கட்டப்பட உள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரையில் 747 பேருந்துகள், இரவு 7 மணி முதல் 8 மணி வரை 38 நகரப் பேருந்துகளும் வந்து செல்லுமாறு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 30 நாள்களுக்குள், பேருந்து நிலையம் தொடா்பான ஆலோசனைகள், ஆட்சேபணைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். அதன்பின் கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...