இடைநிலை ஆசிரியர்கள் 18 பேருக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்
By DIN | Published On : 01st September 2019 06:22 AM | Last Updated : 01st September 2019 06:22 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 18 பேருக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான கலந்தாய்வை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மு.ஆ.உதயகுமார், ரமேஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், கண்காணிப்பாளர் கலையரசன் ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர். இதில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 18 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்கள், மாவட்டத்தின் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டனர்.
ஒரே ஒன்றியத்துக்குள் 9 பேருக்கும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் 9 பேருக்கும் மாறுதல் அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடிதத்தை, மாவட்டக் கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கினர்.
கடந்த ஆண்டு ஆக. 1-ஆம் தேதியின்படி மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். நிகழாண்டிலும் அப்பள்ளிகளில் போதியளவில் மாணவர்கள் சேராததால், 18 பேருக்கும் பணி நிரவல் மூலம் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.