கூட்டுறவு வேளாண் சங்கத்தில் மஞ்சள் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை
By DIN | Published On : 01st September 2019 06:07 AM | Last Updated : 01st September 2019 06:07 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 1,500 மூட்டை மஞ்சள் ரூ.75 லட்சத்துக்கு விற்பனையானது.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் அரியலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கடலூர், ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் விற்பனைக்கு வந்தது.
இந்த மஞ்சளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலம் மூலம் 1,500 மூட்டை மஞ்சள் ரூ.75 லட்சத்துக்கு விற்பனையானது. விரலி ரகம் குவிண்டால் ரூ.7,117 முதல் ரூ.8,643 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ.6,599 முதல் ரூ.7,299 வரையும், பனங்காளி ரகம் குவிண்டாலுக்கு ரூ.11,299 முதல் ரூ.12, 899 வரையும் விலைபோயின.