சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை பூமிதி விழா, பொங்கல் விழா நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டிற்கான விழா ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 25-ஆம் தேதி மறு காப்புக் கட்டும், செப்.1-ஆம் தேதி அரண்மனை பொங்கல், வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூமிதி மற்றும் பொங்கல் வைக்கும் விழா திங்கள்கிழமை (செப்.2) நடைபெறுகிறது. மேலும், அலகு குத்துதல், மாவிளக்கு, குதிரைத் தேர், அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை, அலகு குத்தல் மற்றும் வேடமிடும் நிகழ்ச்சியும், புதன்கிழமை பூந்தேர், சுவாமி புறப்பாடு விழாவும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் எம்.பாலுசாமி, எஸ்.விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.