காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேர் மீட்பு
By DIN | Published On : 11th September 2019 10:07 AM | Last Updated : 11th September 2019 10:07 AM | அ+அ அ- |

பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
கரூர் மாவட்டம்,வேலாயுதம்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (65). இவர் தனது உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு காவிரியாற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது, அடித்துச் செல்லப்பட்ட இவரை மின்னாம்பள்ளி அருகே உள்ள கொண்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த முருகேசன் மகன் தேவா (21), அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் நக்கீரன் (19), நாமக்கல் புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சூர்யபிரகாஷ் (19) ஆகிய மூன்று மீட்க முயற்சித்தனர்.
ஆனால், இவர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் முதியவர் உள்பட நால்வரையும் பத்திரமாக மீட்டனர்.