சிஐடியு பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 11th September 2019 10:10 AM | Last Updated : 11th September 2019 10:10 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் அகில இந்திய 16-ஆவது மாநாடு குறித்த மாவட்ட சிஐடியு பேரவைக் கூட்டம், மாவட்டத் தலைவர் பி.சிங்காரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலர் கு.சிவராஜ் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் விளக்க உரையாற்றினார். நாமக்கல் மாவட்டச் செயலர் ந.வேலுசாமி, அகில இந்திய மாநாடு தயாரிப்பு பணிகள் குறித்த அறிக்கையை முன்மொழிந்து பேசினார்.
இதில், 2020 ஜனவரி 23 முதல் 27 வரை சென்னையில் நடைபெறும் மாநாட்டில், சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், தனியார்மயமாக்குவதை தடுத்திட வேண்டும். 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்கி நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்தம், அவுட்சோர்ஸிங் போன்ற பெயர்களில் உள்ள நவீன சுரண்டல் முறையை அகற்ற வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். நலவாரிய உதவித் தொகைகளை அதிகரிக்க வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் ஏ.கே. சந்திரசேகர், மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.அசோகன், எம்.ரங்கசாமி, எல்.ஜெயக்கொடி, மாவட்ட துணைச் செயலர்கள் கே.மோகன், எஸ்.முத்துக்குமார், கே.ஜெயராமன், எம்.பூங்கொடி, வி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.