தடகளப் போட்டி: அரசுப் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 11th September 2019 10:05 AM | Last Updated : 11th September 2019 10:05 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு வட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகளில் தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில், வட்டாரத்தைச் சேர்ந்த 18 பள்ளிகளின் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் பங்கேற்ற திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் தேவயானி, மோனிகா, நவித்ரா, பவித்ரா, இளவரசி, சீலா, வாணிஸ்ரீ, ராணி, அஞ்சலி, சௌந்தர்யா, பூஜா, அமுதா ஆகியோர் கலந்துகொண்ட தனிநபர், குழுப் போட்டிகளில் வெற்றி பெற்றனர். தனிநபர் போட்டிகளில் பங்கேற்ற சீலா அதிகளவிலான புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றது. மாணவியரையும், உடற்கல்வி ஆசிரியை செல்வி ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரங்கராஜன், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.
போட்டிகளில் பங்கேற்ற அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாவது இடம் பெற்றது. மாணவியருக்கு திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி, பள்ளித் தலைமை ஆசிரியை தேன்மொழி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் முரளிதரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர் .