தடகளப் போட்டி: நாமக்கல் செல்வம் கல்லூரி சாம்பியன்
By DIN | Published On : 11th September 2019 10:05 AM | Last Updated : 11th September 2019 10:05 AM | அ+அ அ- |

பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில், நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி தொடர்ந்து 16-ஆம் ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான, 2019-2020-ஆம் கல்வியாண்டுக்குரிய தடகளப் போட்டிகள், ஒசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் 62 கல்லூரிகளுக்கு மேல் கலந்துகொண்டன. இதில் நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு வீரர்கள், வீராங்கனையர் பங்கேற்று விளையாடினர். ஆண்கள் பிரிவில் 93 புள்ளிகளுடனும், பெண்கள் பிரிவில் 93 புள்ளிகளுடனும் மொத்தம் 186 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 16-ஆம் ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இக்கல்லூரி வென்றது.
போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையரையும், செல்வம் கல்வி நிறுவன தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ், அறக்கட்டளை உறுப்பினர் ஜெயம் செல்வராஜ், துணை தாளாளர் மருத்துவர் செ.பாபு, செயலர் கவீத்ராநந்தினி பாபு, முதல்வர் ந.ராஜவேல், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கி.சி.அருள்சாமி, துணை முதல்வர்கள், உடற்கல்வித் துறை தலைவர், பயிற்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.