வேமன்காட்டுவலசு அரசுப் பள்ளியில் பாரதியார் நினைவு தினம்
By DIN | Published On : 11th September 2019 10:07 AM | Last Updated : 11th September 2019 10:07 AM | அ+அ அ- |

குமாரபாளையத்தை அடுத்த வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு தினக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ம.கெளரி தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் காந்தி நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். தமிழ் இலக்கிய மன்றச் செயலர் ஆர்.குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாரதியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். நான் விரும்பும் கவிஞர் பாரதியார் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. ஆசிரியை அ.பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.