ஆதி தமிழர் பேரவை ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதி தமிழர் பேரவை செயற்குழுக் கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சுமன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில், அருந்ததியர்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த நீலவேந்தன் நினைவு நாளில் ராசிபுரத்தில் மாவட்ட மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், நீல வேங்கை முருகேசன், சக்திவேல், மோகன், தீபா , என்.பேபி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
