முட்டை விலை ரூ.3.55-ஆக உயர்வு
By DIN | Published On : 11th September 2019 10:13 AM | Last Updated : 11th September 2019 10:13 AM | அ+அ அ- |

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 2 காசுகள் உயர்ந்து ரூ.3.55-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதன்கிழமைக்கான முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது. இதில், முட்டை விற்பனை உயர்ந்து வருவதால் பண்ணைக் கொள்முதல் விலையை அதிகரிக்கலாம் என வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.3.55-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.74-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.