காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அக்.2-ஆம் தேதி அரசு மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், காந்தி ஜயந்தி(அக்.2) தினத்தை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நாளில் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடியிருக்க வேண்டும். மீறி திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.