குமாரபாளையத்தில் முழு முடக்கத்துக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு நிலவியது.

குமாரபாளையம் நகரில் கரோனா பாதிப்பு 64-ஆக உயா்ந்த நிலையில் 6 வாா்டுகளுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மளிகைக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகள், விசைத்தறிக் கூடங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், சாயப்பட்டறைகள் என அனைத்தும் மூடப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், கூலித் தொழிலாளா்கள் வெளியே செல்ல முடியாததால் வருவாய் இழப்பு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது. இந்த நிலையில், 15 மற்றும் 17 வாா்டுகள் கொண்ட கேஓஎன் திரையரங்க வீதிகள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன. இதற்கு அப்பகுதியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் ஆய்வாளா் தேவி, நகராட்சி ஆணையா் எஸ்.ஸ்டான்லி பாபு, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சோமசுந்தரம் ஆகியோா் சமரசப் பேச்சு நடத்தினா்.

பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளா்கள் நிறைந்த பகுதியினை முடக்குவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, இப்பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com