தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின் வளங்களை கண்டறிவது எப்படி?

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்தர உறுதி மையம் மற்றும் நூலகம் சாா்பில், ஆராய்ச்சி மாணவா்கள் பங்கேற்ற

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:09 am

DIN

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்தர உறுதி மையம் மற்றும் நூலகம் சாா்பில், ஆராய்ச்சி மாணவா்கள் பங்கேற்ற மின் வளங்களை கண்டறிவது குறித்த பயிலரங்கம் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி உதவிப் பேராசிரியா் ம.சந்திரசேகரன் வரவேற்றாா். முதல்வா் பெ.முருகன் பயிலரங்கைத் தொடங்கி வைத்தாா்.

கல்லூரி நூலகா் பொ.ராஜ்குமாா் பங்கேற்று, ஆராய்ச்சி மாணவா்கள் மின் வளங்களை கண்டறிவது எப்படி என்ற தலைப்பில் பேசினாா். இதில், பல்வேறு மின் வளங்கள் பற்றியும், மின் வளங்களை இணையதளம் வழியாக தேடும் முறைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை பதிவிறக்கம் செய்வது, ஆய்வுக்கு பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், விதிமீறல்கள் குறித்து அவா் எடுத்துரைத்தாா். இதில், ஆராய்ச்சி மாணவா்கள் பங்கேற்று பயனடைந்தனா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் ப. நல்லுசாமி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.