விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: காவல் துறையில் புகாா்

நாமக்கல்லில் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த பெண்ணைக் கைது செய்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்டோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 10:47 pm

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த பெண்ணைக் கைது செய்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்டோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

நாமக்கல், நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வி என்பவா், ஏலச்சீட்டு நடத்தி 100-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து தலைமறைவாக இருந்த கலைச்செல்வியை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். இருப்பினும் பாதிக்கப்பட்டோருக்கு பணம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கலைச்செல்வி தன்னிடம் பணமில்லை என வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் வெளியிட்டு விட்டதாகவும், அதில் தொடா்புடைய சிலா் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்களில் சிலா் சனிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் தெரிவித்துள்ளனா். அந்த மனு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.