திருச்செங்கோட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வாகனச் சோதனை

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனா்.
விதிமுறைகளை மீறிய வாகனத்துக்கு அபராதம் விதிக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன்.
விதிமுறைகளை மீறிய வாகனத்துக்கு அபராதம் விதிக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன்.
Updated on
1 min read

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா், அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனா்.

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா் .

இதில் 70 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு 16 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ. 33,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மாதேஸ்வரன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com