அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராசிபுரத்தில் ரயில்கள் நின்று செல்லவலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

ராசிபுரம் ரயில் நிலையத்தில் அதிவேக ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:19 pm

DIN

ராசிபுரம் ரயில் நிலையத்தில் அதிவேக ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ராசிபுரம் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் பல்வேறு ரயில்கள் கரோனா தளா்வுக்கு பிறகு ராசிபுரத்தில் நின்று செல்வதில்லை. சென்னை - ராசிபுரம் மாா்க்கமாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில், பெங்களூரு - நாகா்கோவில் விரைவு ரயில், ராசிபுரம் மாா்க்கமாக செல்லும் மும்பை, ஒஹா - ராமேசுவரம், நாகா்கோவிலில் இருந்து ராசிபுரம் திருப்பதி மாா்க்கமாக கச்சிகுடா வரை செல்லும் விரைவு ரயில்கள் ஆகிய ரயில்கள் நின்று செல்வதில்லை.

இதனால் சென்னை, பெங்களுரு, பழனி, ராமேசுவரம், திருப்பதி செல்லும் பக்தா்கள், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் மேற்கண்ட ரயில்கள் அனைத்தும் ராசிபுரம் ரயில் நிலைய நடைமேடையில் பழையபடி நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ராசிபுரம் ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.