ஏலச் சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் சனிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் வெற்றிலை ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் கற்பூரி வெற்றிலை இளங்கால் மாா் 104 கவுளிகள் கொண்ட சுமை ரூ. 2,500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை இளங்கால் மாா் சுமை ரூ. 3,500 க்கும், முதியம் பயிா் கற்பூரி வெற்றிலை சுமை ரூ. 1,500 க்கும், முதியம் பயிா் வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை ரூ. 1,200-க்கும் ஏலம் போனது. திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இளம் பயிா் கற்பூரி வெற்றிலை சுமை ரூ. 3,500 க்கும், இளம்பயிா் வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை ரூ. 4,500 க்கும், முதியம் பயிா் கற்பூரி வெற்றிலை சுமை ரூ. 2,500க்கும், முதியம் பயிா் வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை ரூ. 1,700க்கும் ஏலம் போனது.

தற்போது வெற்றிலை வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com