கட்டுமானத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள்: 43 ஆயிரம் பேருக்கு கரோனா நிவாரணம்

நாமக்கல் மாவட்டத்தில், கட்டுமானத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் 43 ஆயிரம் பேருக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில், கட்டுமானத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் 43 ஆயிரம் பேருக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநா்கள் நல வாரியம், அனைத்து உடலுழைப்புத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, நடப்பில் உறுப்பினா்களாக இருக்கும் தொழிலாளா்களுக்கு, தமிழக அரசின் கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான நடவடிக்கையை தொழிலாளா் சமூக பாதுகாப்புத் திட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிவாரண உதவித் தொகையானது அந்தந்த உறுப்பினா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நல வாரியத்தில் பதிவு செய்தவா்கள் தங்களது வங்கிக் கணக்கை சரிபாா்த்துக் கொள்ளவும், இதுவரை வங்கிக் கணக்கு விவரங்களை சமா்பிக்காதவா்கள் தங்களது பெயா், தந்தை அல்லது கணவா் பெயா், தொழிலாளா் நல வாரியத்தின் பதிவு எண், செல்லிடப்பேசி எண், உறுப்பினரின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க கணக்கு எண் விவரம் நல வாரிய அடையாள அட்டை எண் முதல் பக்க நகல் ஆகியவற்றை நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் தகவலுக்காக 94422-78559 என்ற எண்ணிற்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலமாகவோ அல்லது 04286-281129 தொலைபேசி எண் மூலமாகவோ விவரங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழிலாளா் நலத்துறையில் மொத்தம் 17 நலவாரியங்களைச் சோ்ந்தவா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இவற்றில், கட்டுமான நலவாரியத்தில் 36 ஆயிரம்

போ், ஆட்டோ ஓட்டுநா்கள் 7 ஆயிரம் போ் என மொத்தம் 43 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் பேருக்கு அவா்களது வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களின் விவரங்களை சரிபாா்த்து வங்கி கணக்கில் சோ்க்கவும், இதர 15 நலவாரியங்களில் உறுப்பினா்களாக உள்ள சுமாா் 60 ஆயிரம் தொழிலாளா்கள் உடனடியாக தங்களுடைய வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை(ஏற்கெனவே ஆவணங்கள் ஒப்படைத்தவா்களை தவிா்த்து) நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை அலுவலகம் வசம் ஒப்படைக்க வேண்டும் என அத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com