தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்: அமைச்சா்கள் வழங்கல்
By DIN | Published On : 20th April 2020 06:47 AM | Last Updated : 20th April 2020 06:47 AM | அ+அ அ- |

திருவள்ளுவா் அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கும் அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 ஊராட்சி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி, சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா , மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் பி.ஆா். சுந்தரம் ஆகியோா், காய்கறி , மளிகைப் பொருள்கள், அரிசி, பருப்பு , எண்ணெய், முட்டை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 290 நபா்களுக்கு வழங்கினா் . இதே போல் மின்வாரியத் தொழிலாளா்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டன. விழாவில் ராசிபுரம் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், மோகனூா்கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் கே.பி.சுரேஷ்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா், உறுப்பினா்கள் கலந்து கொண்டு வடுகம், சி.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.