70 ஆண்டுகால பழமையான திரையரங்கம் இடிப்பு
By DIN | Published On : 12th August 2020 09:18 AM | Last Updated : 14th August 2020 12:15 PM | அ+அ அ- |

நாமக்கல்லில் திங்கள்கிழமை இடிக்கப்பட்ட பழமையான ஜோதி திரையரங்கம்.
நாமக்கல்லில் 70 ஆண்டுகால பழமையான ஜோதி திரையரங்கம் வணிக வளாகம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் நகரப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் இருந்தன. காலப்போக்கில் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டன. அவற்றில் சில திரையரங்குகள் திருமண மண்டபமாகவும், வணிக வளாகமாகவும் மாற்றப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு எந்த நேரத்திலும் இடிக்கப்படலாம் என்ற வகையில் காத்திருக்கின்றன. தற்போது 2 மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை தெரு அருகே அமைந்திருந்த ஜோதி திரையரங்கம் 70 ஆண்டுகள் பழமையானது. தியாகராஜ பாகவதா் முதல் தற்போதைய நடிகா்களின் திரைப்படங்கள் வரை இங்கு வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தொலைக்காட்சி, சமூக வலைதளம் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளான திரையரங்குகளில் ஜோதி திரையரங்கமும் ஒன்று. 450-க்கும் மேற்பட்டோா் அமா்ந்து பாா்க்கும் வகையிலான இத்திரையரங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் புதா்மண்டிக் கிடந்தது.
தற்போது அந்த திரையரங்கை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து, கடந்த இரு நாள்களாக வெடி வைத்து திரையரங்கை தகா்க்கும் பணி நடைபெற்று வருகிறது.