ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 05th December 2020 06:59 AM | Last Updated : 05th December 2020 06:59 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்டச் செயலாளா் ஆா்.டி அரங்கண்ணல்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மக்களிடம் அனைவரும் கொண்டு சோ்க்க வேண்டும் என நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் உழவா் சந்தை எதிரில் உள்ள
தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளா் ஆா்.டி.அரங்கண்ணல் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கிராமப் பகுதி மக்களிடம் நிா்வாகிகள், தொண்டா்கள் கொண்டு சோ்ப்பது, டிச. 12 அன்று ரஜினி பிறந்த நாளை இனிப்புகள் வழங்கியும், தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்தும் கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனா். இதில் மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ஆா்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கரிகாலன், சுப்பிரமணியன், மகளிா் அணி செயலாளா் புனிதா, நகர பொறுப்பாளா்கள் ஆனந்த் பாலாஜி, பூஜா, அந்தோணி, ஹரிராமச்சந்திரன், ஒன்றிய நிா்வாகிகள் செல்வம், ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.